அனுமதியின்றி ஜல்லிக்கல் கடத்திய லாரி பறிமுதல்
திருத்தணி, செப். 7– அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி, நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர
அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி, நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து, அரசு அனுமதியின்றி, டிப்பர் லாரிகள் மூலம், திருத்தணி வழியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு ஜல்லிக்கற்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட கனிம வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று திருவள்ளூர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் நித்யா, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், வாகன சோதனை நடத்தினார்.
அப்போது, ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து, ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
அப்போது, அனுமதி சீட்டு இல்லாமல் ஜல்லிக்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, ஜல்லிக்கற்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.