Arts, culture, entertainment and media
தேசிய வளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவருக்கு தங்கம்
திருபுவனை: தேசிய அளவிலான வளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மதகடிப்பட்டு, புதுநகர் திருநாவுக்கரசு –சுந்தரி தம்பதி மகன் விஷால், 23; மாற்றுத்திறனாளி. இவர் கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் பி.பி.ஏ., (சுற்றுலா) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தேசிய அளவிலான ஸ்பெஷல் ஒலிம்பிக் வளு துாக்கும் போட்டி கடந்த ஆக., 29ம் தேதி முதல் செப்., 3ம் தேதி வரை நடந்தது. இதில், புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் தனது பயிற்சியாளர் பாக்கியராஜ் தலைமையில், கலந்துகொண்ட, மாணவர் விஷால் 59 கிலோ எடை பிரிவில் ஸ்குவார்டு 175 கிலோ, டெட் 175 கிலோ மற்றும் பெஞ்ச் பிரஸ் பிரிவில் 90 கிலோ என, மொத்தம் 440 கிலோ எடை துாக்கி தங்கப்பதக்கம் மற்றும் ‘ஸ்ட்ராங் மேன் ஆப் இந்தியா’ பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார்.