Lifestyle and human interest
அரசு பஸ் திடீர் பழுதால் ‘டிராபிக்’ பொது மக்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அரசு பஸ் திடீரென பழுதாகியதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப்டடது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பில்லுார் கிராமம் நோக்கி, நேற்று மாலை 6:00 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது.
இந்த பஸ்சில் பொதுமக்கள், மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்த பஸ், விழுப்புரம் நேருஜி சாலையில் வீரவாழியம்மன் கோவில் அருகே சென்ற போது திடீரென பிரேக் டவுன் ஆகிய நடுரோட்டிலே நின்றது. இதனால், விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பஸ்சிலிருந்த பயணிகளை கீழே இறக்கினர்.
பின், பஸ்சை, பயணிகள் உதவியோடு போலீசார் சிறிது துாரம் தள்ளி சென்று சாலையோரம் நிறுத்தினர். இதையடுத்து, புதுச்சேரி சாலையில் போக்குவரத்து சீராகியது. பின், போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்சின் பழுதை சீரமைத்தனர்.
இதனால், விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.