ரூ.2.60 கோடியில் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்
கோட்டக்குப்பம்: குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை தள நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவங்கியது.
கோட்டக்குப்பம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் தமிழக அரசு வறட்சித்திட்ட நிதியின் கீழ், ரூ. 2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தரை தள நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, துணைத் தலைவர் ஜீனத் விவி முபாரக், நகராட்சி கமிஷ்னர் துர்கா ஆகியோர் பணியை துவங்கி வைத்தனர்.
இங்கு அமைக்கப்படும் தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சின்னகோட்டக்குப்பம், குயிலாப்பாளையம் பகுதியில், 7 போர்வெல்கள் அமைக்கப்பட்டு, நீர் நிரப்பப்படும்.
இங்கிருந்து கோட்டக்குப்பம் பழைய பட்டினசாலை பகுதியில் உள்ள, 8 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி பொறியாளர் ரவிக்குமார், நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் தினேஷ் ஆரோக்கியா, நகரமைப்பு ஆய்வர் ஜெயபாஸ்கர் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.