20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பு
சிவகாசி, செப். 6 - சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மூலம் சேகரிக்கப்பட்ட 20 டன்
சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மூலம் சேகரிக்கப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி 48 வார்டுகளில் உள்ள 45,244 குடியிருப்புகள் 10,931 வணிக நிறுவனங்களிடமிருந்து தினசரி உருவாகும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மூலம் உருவாகும் இடத்திலேயே 4 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டு துாய்மை பணியாளர்களால் வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது.
தினசரி 2.5 முதல் 3. 5 டன் வரையிலான மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகின்றது. சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நேரு காலனி, கண்ணகி காலனி, விஸ்வநத்தம் பகுதியில் அமைந்துள்ள 3 வளமீட்பு மையங்களின் மூலம் பிரித்து கையாளப்பட்டு பேல் பேக்கிங் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. சேமித்து வைக்கப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யும் தனியார் தொழிற்சாலைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
கமிஷனர் கண்ணன் கூறுகையில், மக்கள் கடைகள் ஓட்டல்களுக்கு செல்லும் பொழுது துணிப்பைகள். பாத்திரங்கள் எடுத்துச்செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் கேரி பைகளின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெகிழி இல்லாத பசுமையான மாநகராட்சியாக மாற்றுவதற்கு மக்கள் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.