Arts, culture, entertainment and media
வருஷநாடு மலைக்கிராம மக்கள் உண்ணாவிரதம்
கடமலைக்குண்டு, செப். 6- வருஷநாடு அருகே மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில்
வருஷநாடு அருகே மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜபுரத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வருஷநாடு அதனை சுற்றி உள்ள மலைக்கிராம மக்களை உடனடியாக வெளியேற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்துகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக வருஷநாடு அருகே கடைக்கோடி மலைக்கிராமமான காமராஜபுரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் தங்களை ஆக்கிரமிப்பார்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் வலியுறுத்துகின்றனர். அரசின் துறைகளில் பணியில் இருக்கும் இப் பகுதியைச் சேர்ந்தவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி அவர்களுக்கும் நெருக்கடி கொடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்றும் வாழ்வாதாரப் போராட்டத்தை தாங்கள் கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.