Politics
சவுமியா குறித்து அவதுாறு எஸ்.எப்.ஐ., தலைவி மீது புகார்
சேலம்; பா.ம.க., மாநில மாணவர் சங்க தலைவர் விஜய-ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமாரிடம் நேற்று அளித்த மனு:
இந்திய மாணவர் சங்க மாநில தலைவி மிரு-துளா, பா.ம.க.,வையும், எம்.எல்.ஏ., சவுமியா குறித்தும் அவதுாறு பரப்பி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கலவரத்தை துாண்-டும்படி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்-வைத்து பேசியுள்ளார்.
இது, பா.ம.க.,வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மிருதுளாவை கைது செய்ய வேண்டும். அவருக்கு பின் யாரும் உள்ளனரா என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.