Sport
கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே டர்ப் கிரிக்கெட் பைனல்
கோவை: இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோவை கிளை சார்பில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான, 'டர்ப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2026' போட்டி, சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் துவங்கியது.
தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆதரவுடன் 'டிரீம்ஸ் ஈவென்ட்ஸ்' நடத்தும் இப்போட்டியில், பல முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்த 16 அணிகள் நான்கு குழுக்களாக பங்கேற்றுள்ளன.
மீடியா பார்ட்னர் ஆக 'தினமலர்' நாளிதழ் உள்ளது. 'லீக்' முறையில் எட்டு ஓவர் கொண்ட போட்டிகள் நடந்தன.
நிறைவில், ரஷ்சர், கான்பிடன்ட் கைஸ், டாமினேட்டர்ஸ், பிரீகாட் சேலஞ்சர்ஸ் அணிகள், தலா ஒரு வெற்றியுடன் முன்னிலையில் இருந்தன.
முன்னதாக, எல்.எம்.டபுள்யூ நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சதீஷ் போட்டிகளை துவங்கி வைத்தார். இன்று 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, 'பிஆர்சிஐ பிரீமியர் லீக்' முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன.