Politics
சிதம்பரத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை பில்ரோத் மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயம், குடல் - இரைப்பை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்தமுகாமை லயன் மாவட்ட ஆளுநர் தேர்வு கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் கேசவன், இன்னர் வீல் சங்கத் தலைவி அனிதா தீபக்குமார், கிரீடு தொண்டு நிறுவனத் தலைவர் நடனசபாபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பில்ரோத் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் இளையராஜா, மோகன், குமரகுருபரன், அபிஷேக் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. ( ECG), எக்கோ (ECHO) உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாகச் செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். காமராஜர் நர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேரும் முகாமில் பங்கேற்று சேவையாற்றினர்.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை மருத்துவர்கள் ஏ.வி. கிரிதரன், ஆர். பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். முகாமின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)