எழும்பூர் ரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்
சென்னை, செப். 6– எழும்பூர் ரயில் நிலையத்தில், 40 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை ரயில்வே பாதுகாப்பு
எழும்பூர் ரயில் நிலையத்தில், 40 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரயில்கள் வாயிலாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 மற்றும் 4ம் தேதிகளில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த புவனேஸ்வர் – புதுச்சேரி மற்றும் ஆமதாபாத் – திருச்சி விரைவு ரயில்களில் கேட்பாரற்றுக் கிடந்த பைகளை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர்.
அதில், 40 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவற்றை கொண்டு வந்தவர்கள் ரயிலில் இல்லாததால், புகையிலைப் பொருட்கள் போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.