சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி

புன்செய்புளியம்பட்டி; திருப்பூரில் இருந்து காட்டன் ஜவுளி பண்டல் ஏற்-றிய லாரி, கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு நேற்று மாலை சென்றது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் புன்-செய்புளியம்பட்டி பெட்ரோல் பங்க் முன்புறம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியன் மீது மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது. டிரைவர் நவீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
புன்செய்புளியம்பட்டி போலீசார் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.