விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.
இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை துார்வாரும் பணிகளை இப்போதே செய்ய வேண்டும். குறிப்பாக வைகை நீர் பாயும் பிரதான கால்வாய்களை சுத்தம் செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். திருமங்கலம் பிரதான கால்வாய் வாகைக்குளம், காங்கேய நத்தம், சாத்தங்குடி, புலியூர், அழகு சிறை, பொன்னமங்கலம், சித்தாளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களை மழைக்காலத்திற்கு முன்பே துார்வார வேண்டும் என்றார்.
மேல உரப்பனுார் நூலகத்தில் மின்சார வசதி இல்லை. தினசரி பத்திரிகைகள் வருவதில்லை அதை சரிசெய்ய வேண்டும். திருமங்கலம் செங்குளம் கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததால் பணிகள் தொடங்க வில்லை என்றார். ‘விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தாசில்தார் தெரிவித்தார்.