Politics
மிசா குறித்த முதல்வரின் பேச்சு: "மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்" - திருமாவளவன் விமர்சனம்

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
மிசா விவகாரம் குறித்து பேசியபோது, முதல்வர் வெளிப்படுத்திய உடல்மொழி, மனித மாண்புகளுக்கு எதிரானதாகும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
