Arts, culture, entertainment and media
“காஸ்டிங் ஏஜென்டுகளை நியமிக்கவில்லை…” - ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

ராஜ்கமல் பிலிம்ஸ், தங்கள் படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. மோசடி செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
“நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும், அதை நம்ப வேண்டாம்” என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும், அதை நம்ப வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ராஜ் கமல் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ரஜினி நடிக்கும் ‘தர்மன்’ படத்தையும் கமல்ஹாசன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
