செய்திகள் சில வரிகளில்
தஞ்சாவூர்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பஸ் டிரைவர் சவரிராஜன், 43, கண்டக்டர் அன்பழகன், 58, உட்பட 15 பேர் காயமடைந்தனர்.