Economy, business and finance
ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் புதிய கட்டுப்பாடு
சிட்னி,சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களை பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் புதிய சட்ட வரைவை ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது. இ

இதன் மூலம் அல்காரிதம் பரிந்துரைக்கும் பதிவுகளைப் பார்ப்பதா அல்லது தாம் பின்தொடரும் கணக்குகளின் பதிவுகளை மட்டும் பார்ப்பதா என்பதைப் பயனர்களே தீர்மானிக்கலாம்.
இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.743.48 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த முதல் நாடாகத் தடை விதித்த ஆஸ்திரேலிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி இந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.