இரும்பு கேட் கழற்றி பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் அரசு பள்ளியின் வாசலை மறித்து கார் நிறுத்தப்பட்டிருந்தது. பள்ளிக்குள் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். பின்னர் இரும்பு கேட்டை அகற்றி வழி ஏற்படுத்தப்பட்டது.
திருவிதாங்கோடு பகுதியில் அரசு மலையாள தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று காலையில் பள்ளிக்கு மாணவர்கள் வந்தபோது பள்ளி பிரதான நுழைவு வாயிலை முழுமையாக மறைத்து பள்ளிக்குள் செல்ல முடியாத வகையில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கார்.
நீண்ட நேரம் ஆகியும் கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து இரும்பு கேட்டை கழற்றி எடுத்தனர் பின்னர் மாணவர்கள் பள்ளிக்குள் சென்றனர்.