ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கம்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த

அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை
உள்ளது. இந்த தடுப்பணையில், கடந்த மார்ச் மாதம் முதல் காவிரி ஆற்றில்
தண்ணீர் வரத்து குறைவாக வந்தது. மேலும், கோடைகாலம் துவங்கியவுடன்
குடிநீருக்கு மட்டும் தண்ணீர் ஆற்றில் வந்தது.
தடுப்பணையில் குடிநீர் தேவைக்கும் மட்டும் தண்ணீர் தேக்கி
வைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் வரத்து குறைவால் மின் உற்பத்தியும்
பாதிக்கப்பட்டது. கடந்த, ஆறு மாதங்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து
குறைவாக வந்ததால், ஓடப்பள்ளி தடுப்பணையில் தண்ணீர் தேக்கம் குறைவாக
காணப்பட்டது.
கடந்த, 1 முதல் பாசனத்திற்கு, மேட்டூர் அணையில்
இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து
அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்க
பகுதியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
தடுப்பணை நீர்தேக்கம் கடல்போல் காணப்படுகிறது. நீர்தேக்கத்தில்
முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கம் உள்ளதால் மின் உற்பத்தியும்
தீவிரமாக நடக்கிறது.