Politics
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் ஆசிரியர் தினம்
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கி, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தாளாளர் இந்துமதி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை மீனா வரவேற்றார்.
ஆசிரியர்களை பெருமைபடுத்தும் விதமாக மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களால் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.