Arts, culture, entertainment and media
வாடிக்கையாளரை தாக்கிய டாஸ்மாக் ஊழியர் மீது புகார்
கும்மிடிப்பூண்டி, செப். 15– கும்மிடிப்பூண்டி அருகே அரசு மதுக்கடையில், பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்ட தகராறில்,
கும்மிடிப்பூண்டி அருகே அரசு மதுக்கடையில், பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்ட தகராறில், வாடிக்கையாளரை டாஸ்மாக் ஊழியர், உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 30. நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு வலைக்கூண்டு அருகே இயங்கி வரும் அரசு மதுக்கடையில் மது வாங்க சென்றார்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டதால், ராஜேசுக்கும், பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர் பாஸ்கரன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த பாஸ்கரன், ராஜேஷை உருட்டு கட்டையால் தாக்கினார். தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜேஷின் மனைவி வினோதினி அளித்த புகாரின்படி, சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.