Politics
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விமல்ராம் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தொழிலதிபர் செந்தில்குமார் பரிசு வழங்கினார்.
விழாவில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.