நான்கு வகை குப்பைகள்... துடியலூரில் விழிப்புணர்வு....
பெ.நா.பாளையம்:நான்கு வகையான குப்பைகளை பிரிப்பது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் துடியலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல் வகை குப்பை தொட்டியில், சமையலறை கழிவுகள், பழம், காய்கறி தோல்கள், உணவு கழிவுகள், இலைகள் மலர்கள் ஆகியவற்றை போட வேண்டும்.
இரண்டாவது வகை தொட்டியில் காகிதம், கார்ட்போர்ட், பிளாஸ்டிக் பாட்டில்கள், டின், கேன்கள் ஆகியவற்றை போட வேண்டும். மூன்றாவது தொட்டியில் டைபர்கள், மாதவிடாய் துணிகள் உள்ளிட்டவற்றை போட வேண்டும்.
நான்காவது தொட்டியில், மின்னணு சாதனங்கள், பேட்டரிகள், மின்விளக்குகள், உடைந்த கண்ணாடிகள் ஆகியவற்றை போட வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் பிரச்சாரம் செய்தனர். மேலும், இக்குப்பைகளை அதன் தன்மைகளை பொறுத்து உரமாக மாற்றுதல், மறு சுழற்சி செய்தல், பாதுகாப்பாக அகற்றுதல், சிறப்பு மையங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.