வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், பஞ்சமி திதி வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்கக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மாலை 6:00 மணிவரை சுவாமிக்கு சிறப்பு மகா யாகம், மிளகாய் யாகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
மேலும் கோவிலில் உள்ள ஜல வாராஹி அம்மனுக்கு பெண்கள் அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.