கும்பக்கரை அருவியில் நீர் வரத்தால் 80 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி
-- பெரியகுளம், செப். 16- கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு அருவியில் தண்ணீர் வந்ததால் சுற்றுலா

கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு அருவியில் தண்ணீர் வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிய வட்டக்கானல், பாம்பார்புரம் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. ஆண்டின் 10 மாதங்களுக்கும் அதிகமாக அருவியில் தண்ணீர் வந்த நிலையில், இந்தாண்டு மாறுபட்ட காலநிலையால் 50 ஆண்டுகளில் முதன் முறையாக இந்தாண்டு வெயிலின் தாக்கத்தால் அருவியில் தண்ணீர் இல்லை. ஜூன் 27 முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் இரவில் மலைப்பகுதி, நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வந்தது. இதனால் 80 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்தது.