உலக தமிழ் மாநாடு முதல்வருக்கு பாராட்டு

புதுச்சேரி: அரசு சார்பில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும் என அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு பிரான்சு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசு சார்பில் இந்தாண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறித்தார். இந்நிலையில், புதுச்சேரி வந்துள்ள பிரான்சு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் அலன் ஆனந்தன், நேற்று முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
இதில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து, வழக்கறிஞர் கோவிந்தராசு ஆகியோர் உடனிருந்தனர்.