Politics
உலக தென்னை தின திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள்
கிருஷ்ணகிரி; போச்சம்பள்ளியை அடுத்த பனங்காட்டூர் கிரா-மத்தில் உலக தென்னை தின திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஊத்தங்கரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., இளைய-ராஜா கலந்து கொண்டனர். மேலும், தென்னை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, திரளான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விவசாயிகளின் அறிவையும் தொழில்நுட்பத்-தையும் மேம்படுத்தும் வகையில் பலவித அரங்-குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 54 வகை-யான தென்னை கன்றுகள், தென்னையிலிருந்து தயாரித்த, 100 மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அழியும் நிலையிலிருக்கும் 500 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் பேசு-கையில், ''உலக தென்னை தினத்தை வரும் ஆண்டுகளில் மூன்று நாட்கள் தொடர் திருவிழா-வாக நடத்த ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து ஊத்தங்கரை த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாங்கனி கண்-காட்சி நடத்தப்படுவது போல், இனிவரும் காலங்-களில் 'மாங்கனி மற்றும் தென்னை கண்காட்சி' இணைந்து நடத்த முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
விழா ஏற்பாடுகளை, அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர் ஜே.கே.கென்னடி மற்றும் தென்னை விவசாயிகள் செய்திருந்தனர்.