தேசிய நெடுஞ்சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.79) சந்திப்பில் ஏற்பட்டுள்ள பழுதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் தற்போது ஏமப்பேர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நகரப்பகுதி பழைய பஸ் நிலையத்திலிருந்து இந்த புதிய பஸ் நிலையம் செல்வதற்கும், நகரப்பகுதியிலிருந்து சேலம் செல்வதற்கும் இவ்வழியாகவே நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
ஆனால் ஏமப்பேர் பகுதியில் சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே ஏமப்பேர் பகுதி முதல் இந்திலி வரையில் சாலையில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.