Sport
இந்தியாவுக்கு எதிரான பிரேசில் கால்பந்து அணி அறிவிப்பு..! வினிசியஸ், ரபீனியா உள்பட 26 பேர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக விளையாடவிருக்கும் பிரேசில் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
பிரேசில் கால்பந்து அணி - படம்: எக்ஸ் / சிபிஎஃப் ஃபுட்பால்
இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக விளையாடவிருக்கும் ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் வினிசியஸ் ஜூனியர், ரபீனியா, எண்ட்ரிக் என பல நட்சத்திர வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 26 பேர் கொண்ட அணியை கார்லோ அன்செலாட்டி வழிநடத்துகிறார்.
கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகமுறை (5) கோப்பை வென்ற அணியாக பிரேசில் இருக்கிறது. ஆனால், கடந்த உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நார்வே அணியிடம் தோல்வியுற்றது.
கொல்கத்தாவில் சால்ட் லேக் திடலில் வரும் அக்.3ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தப் போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
இந்திய கால்பந்து அணி முதல்முறையாக இந்த ஜாம்பவான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு இது மிகவும் முக்கியமான நாளாக அமையவிருக்கிறது.
பார்சிலோனா நட்சத்திரம் ரபீனியா, ரியல் மாட்ரிட் நட்சத்திரம் வினிசியஸ், ஆர்செனலின் கேப்ரியல் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கவிருக்கின்றன.
கோல்கீப்பர்கள்: ஹ்யூகோ சௌசா (கொரிந்தியன்ஸ்), பெட்ரோ மொரிஸ்கோ (கொரிடிபா), ஒடாவியோ (குருசீரோ).
டிஃபெண்டர்கள்: ஆர்தர் டயஸ் (அத்லெட்டிகோ-பிஆர்), டக்ளஸ் சாண்டோஸ் (ஜெனிட்), கேப்ரியல் மாகல்ஹேஸ் (ஆர்செனல்), ஜெய்ர் (நாட்டிங்ஹாம் வன), மார்க்வினோஸ் (பிஎஸ்ஜி), மாதுசின்ஹோ (கொரிந்தியன்ஸ்), மௌரோ ஜூனியர் (பிஎஸ்வி ஐந்தோவன்), விட்டோர் ரீஸ் (மான்செஸ்டர் ஆர் சிட்டி).
மிட்ஃபீல்டர்கள்: ஆண்ட்ரே சாண்டோஸ் (மான்செஸ்டர் யுனைடெட்), ப்ரெனோ பிடன் (கொரிந்தியன்ஸ்), புருனோ குய்மரேஸ் (ஆர்செனல்), டானிலோ சாண்டோஸ் (போடாஃபோகோ), டக்ளஸ் லூயிஸ் (ஜுவென்டஸ்), கேப்ரியல் போன்டெம்போ (சாண்டோஸ்).
ஃபார்வர்டு வீரர்கள்: என்ட்ரிக் (ரியல் மாட்ரிட்), ஸ்டீபன் (செல்சி), ஜாவோ பெட்ரோ (செல்சி), பெட்ரோ (ஃபிளமெங்கோ), ரபீனியா (பார்சிலோனா), ரேயான் (போர்ன்மவுத்), சாமுவேல் லினோ (ஃபிளமெங்கோ), வினிசியஸ் ஜூனியர் (ரியல் மாட்ரிட்).
A Seleção está pronta para novos desafios: dois jogos contra a Austrália e o primeiro confronto da história contra a Ãndia.
ISSO Ã BRASIL! ð§ð·#BateNoPeito pic.twitter.com/Yht5SuOHjr
Vinicius Jr, Raphinha headline Brazil's star-studded squad for historic India clash
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.