செப்.30க்குள் கிராப் சர்வேபணிகளை முடிக்க அறிவுறுத்தல்
தேனி: மாவட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை செப்.,30க்குள் முடிக்க வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வேளாண், தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் உதவியுடன் இந்த கணக்கெடுப்பு நடந்தது. தொடர்ந்து தன்னார்வலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உதவியுடன் நடந்து வருகிறது. காரீப் பருவ சர்வே பணிகள் ஜூலை இறுதியில் துவங்கியது. ஆனால், விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்யும் பணியால் பணிகள் பாதித்தது. தற்போது பருவம் முடிவதால், கிராப் சர்வே பணிகளை செப்.,30க்குள் முடிக்க வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவை என்றால் தன்னார்வலர்களை பயன்படுத்தவும் தெரிவித்துள்ளனர்.