பஸ் வழித்தடம் நீட்டிப்பு: அமைச்சர் துவக்கம்
குமாரபாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையத்தில் கலியனுார், மாம்பாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்
குமாரபாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையத்தில் கலியனுார், மாம்
அரசு பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு
போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வழித்தடம் நீட்டிப்பு
செய்யப்பட்டது.
கொடியசைத்து, பஸ் பயணத்தை தொடங்கி வைத்தார். சங்ககிரியிலிருந்து
வெப்படை, பள்ளிப்பாளையம் வழியாக ஈரோடு செல்லும் வழித்தட எண்,
எஸ்.எஸ்.1.சி. நகர பஸ்சின் வழித்தடம், கலியனுார் மற்றும் மாம்பாளையம்
அரசு பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், பள்ளி நேரத்திற்கு
காலையும், மாலையும் ஒட்டமெத்தை, அக்ரஹாரம், ஆவத்திபாளையம்,
சில்லாங்காடு, மோளகவுண்டம்பாளையம், கலியனுார் அரசு பள்ளி,
வெள்ளப்பாறை, மாம்பாளையம் அரசு பள்ளி, பள்ளிப்பாளையம் ஆகிய
பகுதிகள் வழியாக, சுற்றுப்பயண முறையில், வழித்தட நீட்டிப்பு செய்து
பஸ் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் செங்கோட்டு வேலவன்,
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ்
உள்பட பலர் பங்கேற்றனர்.