Politics
மா.செ., மீதான பாலியல் புகார் விசாரணைக்கு பின் நடவடிக்கை அமைச்சர் ஆனந்த் உறுதி

சென்னை: சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விக்கு, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அளித்த பதில்:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஜூலை 22ம் தேதி, த.வெ.க., மேற்கு மாவட்ட செயலர் விஜய் மோகன், தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததோடு, தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அவருக்கு ஆதரவாக, 'டிவி' பத்திரிகையாளர் ஜான் பிரிட்டோ மற்றும் தீனா ஆகி யோர் மிரட்டுவதாகவும் கூறி, டி.ஜி.பி., மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்து உள்ளார்.
இதே புகாரை, ஆற்காடு போலீஸ் ஸ்டேஷனிலும் வழங்கி உள்ளார்.
அதன் அடிப்படையில், விஜய் மோகன் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, ராணிப் பேட்டை மாவட்ட மகளிர் அணி நிர்வாகி இந்துமதி, கடந்த ஜூலை, 28ம் தேதி, ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதில், 'பாதிக்கப்பட்டதாக கூறும் பெண், த.வெ.க., மாவட்ட செயலர் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மீதான உண்மை தன்மையை அறிய, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.