மேற்கு வங்க மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்
சேலம்:மேற்கு வங்க மாநிலம் உத்தர்தினாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மொஹூவா ராய். இவரது மனைவி சூர்யா ராய், 67.
வங்க மாநிலம் உத்தர்தினாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மொஹூவா ராய்.
இவரது மனைவி சூர்யா ராய், 67.
வேலை செய்கின்றனர். விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற இவர்கள், கடந்த,
31ல் திருச்சூர் செல்ல, திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில்
வந்தனர். கடந்த, 2 மாலை, 5:33க்கு ரயில் சேலம் வந்தபோது, சூர்யா ராய்
இறங்கினார். மீண்டும் அவர் ஏறுவதற்குள், ரயில் புறப்பட்டது. மனைவியை
காணாததால், ஈரோடில் இறங்கிய மொஹூவா ராய், பின் சேலம் ரயில்வே போலீசில்
புகார்அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அவரை தேடுகின்றனர்.
மாதையன்குட்டையை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் சரவணகுமார், 46.
அவரது சித்தப்பா சண்முகம், சித்தி துளசிமணி, 60, இரு மகன்களுடன்,
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல், வாவிபாளையத்தில் வசித்தார். சில
ஆண்டுக்கு முன் சண்முகம் இறந்தார். கடந்த, 3ல் துளசிமணி, இரு
மகன்களுடன், சரவணகுமார் வீட்டுக்கு, விருந்துக்கு வந்தார். அங்கு
ஏற்பட்ட குடும்ப தகராறில் இரு மகன்களும், துளசிமணியை, சரவணகுமார்
வீட்டில் விட்டு திருப்பூர் சென்றனர். நேற்று முன்தினம் மதியம், வெளியே
சென்ற துளசிமணி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நேற்று சரவணகுமார்
அளித்த புகார்படி, மேட்டூர் போலீசார் தேடுகின்றனர்.