விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனம்: கண்டுபிடிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் மாவட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டுபிடிக்க, போலீசார் உரிய
மாவட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை
கண்டுபிடிக்க, போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், திருச்சி சாலை, மதுரை
சாலை, கோவை சாலை, ஈரோடு மற்றும் சேலம் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், 24
மணி நேரமும் போக்குவரத்து பிஸியாக இருக்கும். இந்நிலையில்,
சமீபகாலமாக கரூர் மாவட் டத்தில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளை,
அடையாளம் தெரியாத வாகனங்கள் மூலம் நடப்பதாக, போலீசார் வழக்கு பதிவு
செய்து, விசாரணையை முடித்து விடுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில்
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, உரிய இழப்பீடு பெற
முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல்
நேரத்திலும், நடக்கும் விபத்துகள் கூட, அடையாளம் தெரியாத வாகனங்கள்
மூலம் நடப்பதாக போலீசார், வழக்கு பதிவு செய்கின்றனர்.
விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு, உரிய நிவாரணம்
கிடைக்கும் வகையில், சாலை விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டம்
ஒழுங்கு போலீசார், உரிய முறையில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து
வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில், மருதுார் முதல் சுக்காலியூர் வரையிலும்,
திருகாம்புலியூர் முதல் வைரமடை வரையிலும், தளவாப்பாளையம் முதல்
ஆண்டிப்பட்டி கோட்டை வரையிலும், தண்ணீர் பந்தல் முதல் ஒத்தமாந்துறை
வரையிலும், குளித்தலை முதல் சீத்தப்பட்டி வரையிலும், ஐந்து ஹைவே
போலீசார் டீம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து ஹைவே
போலீசார் டீமை மீறி, விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பி செல்ல
வழியில்லை.
எனவே, சாலை விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும், சட்டம்
ஒழுங்கு போலீசார், உரிய முறையில் உண்மையான குற்றவாளிகளை
கண்டறிந்து வழக்கு பதிவு செய்து, விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக உதவும் வகை யில் செயல்பட
வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.