Arts, culture, entertainment and media
விவசாய தொழிலாளர் சங்க கிளை மாநாடு
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா இலக்கம்பட்டியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கிளை மாநாடு நடந்தது. சரிதா தலைமை வகித்தார்.
சுபாஷ் சந்திர போஸ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் பூபதி ஆகியோர் பேசினர். தலைவர் மீனா, செயலாளர் இளையராணி, பொருளாளர் சரிதா, துணை தலைவர் பானு, துணை செயலாளர் ஆதிலட்சுமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பொன்னி, சுதா, இளங்கொடி, விஜயா, லட்சுமி, கமலா ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், இலக்கம்பட்டி காலனி பாரதியார் நகரில், தெரு விளக்குகள், புதிய கான்கிரீட் சாலைகள் உடனே அமைக்க வேண்டும். 100 நாள் வேலைக்கு அரசு அறிவித்த ஊதியத்தொகை முழுமையாக வழங்க வேண்டும். இலக்கம்பட்டி காலனியில், வீடற்ற விவசாய கூலி தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்தும், போராட்டம் நடத்தியும், இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த ஆதரவற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள் அனைவருக்கும், ஓ.ஏ.பி., வழங்க வேண்டும். இலக்கம்பட்டியில் மயானத்திற்கு செல்லும் தார்ச்சாலை மற்றும் அனுமன் தீர்த்தம் - இலக்கம்பட்டி காலனி வழியாக, பாவக்கல் செல்லும் சேதமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.