நாமக்கல்லில் 270 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளின் நலனை பாதுகாக்கும் வகையில், 270 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
நலனை பாதுகாக்கவும், மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத தொலைதுார
கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், சிறப்பு
கால்நடை சுகாதார முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம்,
270 சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றியத்திலும் தலா, 18 முகாம் நடத்தப்படும். புதுச்சத்திரம்
யூனியன், திருமலைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெத்துக்காடு
கிராமத்தில், முதல் கட்ட முகாம் துவங்கி நடக்கிறது. இதில்
நோய்வாய்ப்பட்ட பசுக்கள், எருமை, ஆடு மற்றும் கோழிகளுக்கு தேவையான
பரிசோதனை செய்யப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்படும். மேலும்,
நோய்த்தடுப்பு ஊசி போடுதல், குடற்புழு நீக்கம் செய்தல், சினை பிடிக்காத
கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை அளித்தல், ஆண்மை நீக்கம் செய்தல்
மற்றும் தரமான கன்று பெற செயற்கை முறை கருவூட்டல் போன்ற சிகிச்சை
வழங்கப்படும்.
அந்தந்த பகுதிகளில் முகாம்கள் நடக்கும் நாள் மற்றும்
இடங்கள் குறித்து, கால்நடை உதவி டாக்டர்கள் மூலம் விவசாயிகளுக்கு
முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படும். எனவே விவசாயிகள் மற்றும்
கால்நடை வளர்ப்போர், முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்து
வந்து, உரிய மருத்துவ சிகிச்சைகளை பெறலாம். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.