Politics
தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்!
பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ள புதிய பேருந்துகள்.

சேலத்தில் தவெக கட்சி கொடி வண்ணத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்துகள், பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துப் பணிமனையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும், தவெக கட்சி கொடியான மஞ்சள் சிகப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களின் பெயர், பேருந்து வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், புதிய பேருந்துகளுக்கு தவெக கட்சியின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
New buses procured in the colours of the TVK party flag are ready for service in Salem.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.