Politics
Exclusive | “சென்னையின் நெரிசலைக் குறைக்க திருச்சியை இரண்டாம் தலைநகராக்க வேண்டும்..” துரை வைகோ பிரத்யேக பேட...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு சூழலியல் ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில், “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு சூழலியல் ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சூழலியல் பாதிப்பு மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் நல்முடிவு எடுத்தது போல பட்டினப்பாக்கம் விஷயத்திலும் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஒட்டுமொத்த தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கும் திருச்சியை நிர்வாகத் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மும்பை நிதித் தலைநகராகவும், டெல்லி நிர்வாகத் தலைநகராகவும் செயல்படுவது போல் சென்னையை நிதித் தலைநகராக வைத்துக்கொண்டு திருச்சியை நிர்வாகத் தலைநகராக அறிவிக்கலாம். கன்னியாகுமரி, தென்காசி, கொங்கு மண்டலம் என மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் பொதுமக்கள் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் திருச்சிக்கு வந்து செல்ல முடியும். இதனால் நேரம் மற்றும் பயணச் செலவு மிச்சமாகும்.
திருச்சியை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையாகும். இத்திட்டத்தால் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சியடையும்.
"தமிழ்நாட்டின் 2வது தலைநகராக திருச்சியை அறிவித்து புதிய தலைமைச் செயலகத்தை அங்கு கட்ட வேண்டும்"
மத்திய அரசின் HAPP நிறுவனத்திடமிருந்து தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச்செயலகத்தை மிக எளிதாக அமைக்க முடியும். சென்னைக்கு மாற்றாக திருச்சியில் புதிய தலைமைச்செயலகம் அமைத்து எம்.ஜி.ஆர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் முதலமைச்சர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
