Politics
லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலி
ஈரோடு:ஈரோடு திருநகர் காலனி வி.ஜி.பி., நகரை சேர்ந்தவர் ஷேக் தாவூத், 67; கடந்த, 1ம் தேதி இரவு காரில் சென்றார்.
ரிஜ்வான் ஓட்டினார். ஈரோடு ஸ்வஸ்திக் கார்னரில் இருந்து எல்லை
மாரியம்மன் கோவில் நோக்கி சத்தி ரோட்டில் சென்றபோது, டிரைவரின்
கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது.
ஷேக் தாவூத் படுகாயம், ரிஜ்வான் லேசான காயம் அடைந்தனர். ஈரோடு அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஷேக் தாவூத் இறந்தார்.