இடி மின்னலுடன் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்,

மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது.
மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை, 4:40 மணி முதல், 5:40 வரை, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கட
சமுத்திரம், பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி, உள்ளிட்ட பகுதியில், ஒரு
மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, பகுதியிலுள்ள வயல்களில் தண்ணீர்
தேங்கியது. வறட்சியின் பிடியில் இருந்த விவசாயிகளும், பொதுமக்களும்
நேற்று மாலை பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
