Sport
4 மணி நேரம் 28 நிமிஷங்கள்: நடப்பு சாம்பியன் அல்கராஸை வீழ்த்திய ஷெல்டன்!

யுஎஸ் ஓபன் காலிறுதியில் நடப்பு சாம்பியன் அல்கராஸை வீழ்த்திய ஷெல்டன் குறித்து...
வெற்றிக் களிப்பில் பென் ஷெல்டன் - படம்: ஏபி
யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸை பென் ஷெல்டன் வீழ்த்திய, அரையிறுதிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டி 4 மணி நேரம் 28 நிமிஷங்கள் நடைபெற்றது. மிகுந்த கடினமாக சென்ற கடைசி செட்டை ஷெல்டன் 10-7 என வென்று, அல்கராஸுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இத்தாலியின் கார்லோஸ் அல்கராஸ் - அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினார்கள். இந்தப் போட்டியில் 6-7 (5-7), 6-1, 6-3, 1-6, 7-6 (10-7) என செட் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டி 228 நிமிஷங்கள் (4 மணி நேரம் 28 நிமிஷங்கள்) நடைபெற்றன. அமெரிக்காவில் நள்ளிரவு 3.33 மணிக்கு வரைக்கும் இந்தப் போட்டி நடைபெற்றது.
நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் தோல்வி அடைந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக, தரவரிசையில் டாப் 3 இடத்தில் இருக்கும் வீரர்களுடன் 0-17 என மோசமான சாதனையை ஷெல்டன் வைத்திருந்தார்.
முதன்முறையாக ஷெல்டன் இதனை மாற்றி டாப் 3 வீரரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அரையிறுதியில் அவர் சக அமெரிக்க வீரரான பிரான்சிஸ் டியாஃபோ உடன் மோதவிருக்கிறார்.
இதுவரை அரையிறுதியில் வெல்லாத ஷெல்டனுக்கு இந்தமுறை நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
4 hours and 28 minutes: Shelton defeats defending champion Alcaraz in US Open QuarteFinals
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.